அமைவிடம் : வரிசை எண் : 14 இறைவன்: சாமவேதீஸ்வரர் இறைவி : லோகநாயகி தலமரம் : ? தீர்த்தம் : ? குலம் : ஆயர் அவதாரத் தலம் : திருமங்கலம் முக்தி தலம் : திருமங்கலம் செய்த தொண்டு : சிவ வழிபாடு குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : கார்த்திகை - அஸ்தம் வரலாறு : மங்கலவூர் என்னும் ஊரில் ஆயர் குலத்தில் அவதாரம் செய்தார். தன் வேய்ங்குழலில் பஞ்சாட்சரம் மந்திரத்தை இசைத்து வந்தார். தம் குலத் தொழிலான பசு காத்தல் காரணமாக தினமும் பசுக்களை மேய்த்துக் கொண்டே குழல் இசைத்தார். அவர் இசையில் அசையும் பொருள் அசையா பொருள் என்று அனைத்தும் மயங்கின. இறைவனும் அவ் இசை கேட்க உளம் கொண்டு அவரைச் சிவலோகத்திற்கு வருக என அழைத்து அருள் புரிந்தார். முகவரி : அருள்மிகு. சாமவேதீஸ்வரர் திருக்கோயில், திருமங்கலம் (லால்குடி வழி)– 621601 திருச்சி மாவட்டம் கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 07.00 தொடர்புக்கு : 1.திரு. ஞானஸ்கந்தன் குருக்கள் தொலைபேசி : 0431-2541040
2.திரு. செல்வேந்திரன் - அலைபேசி :9994438684
எடுத்த குழற் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும்
தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து
அடுத்தசரா சரங்களெலாம் தங்கவருந் தங்கருணை
அடுத்த இசை அமுது அளித்துச் செல்கின்றார் அங்கு ஒரு நாள்
- பெ.பு. 944